
இன்று பெரு நகரங்களில் மட்டுமல்ல சிறு டவுன்களிலும் அதிகாலையில் நாம் காணக்கூடிய காட்சி " ஜாக்கிங் - வாக்கிங் ". இது கடந்த 10 வருடங்களில் தான் அதிக மக்கள் தங்கள் உடம்பை இளைக்க ஓடுகிறார்கள். மேல்தட்டு- நடுத்தட்டு -மேல்நடுத்தட்டு மக்கள் தான் தங்கள் பருமன் குறைய முற்படுகின்றனர். ஏனேன்றால், இவர்களுக்கு உடல் உழைப்பு என்பது மிகவும் அரிதாகி போய்விட்டது. நாளை காலை நீங்கள் வாக்கிங் போக ஆரம்பிக்காவிட்டால் நாளை மறுநாள் செத்து போவீங்க என மருத்துவர் சென்னதும் தான் இந்த வாக்கிங் யோசனை வரும் 50 வயதை தாண்டியவர்களுக்கு.ஐ.டி. துறையினர் உட்காந்த நிலையிலேயே வேலை செய்வதால் உடல் நிலைகுலைந்து போயுள்ளனர். புதிதாய் வாங்கிய கால் டவுசர் தொடைக்கு மேல் ஏற மறுப்பதால் கடுப்பாகி காலை ஜாகிங்கிற்கு செல்கின்றனர். 45 வயதை கடந்த நபர்கள் தங்கள் உடலில் மெதுவாய் சர்க்கரை , முதுகு வலி போன்ற அறிகுறிகள் வந்ததும் அலாரம் வைத்து வாக்கிங் கிளம்புகின்றனர். வீட்டிற்கு அருகில் உள்ள மைதானங்கள், ரயில் நிலைய பிளாட்பாரம் இவர்களுக்கு உதவும். மேல்தட்டு மக்களுக்கு ரேசனில் சர்க்கரை இருக்காது ஆனால் உடலில் நிறைய இருக்கும், இவர்கள் அரிதாகவே மைதானத்துக்கு வருகின்றனர், தங்கள் ஏரியா ஜிம்மில் மாதம் ஒரு வலுவான தொகையை கட்டி சேர்ந்து, குளு குளு அறையில் தானியங்கி இயந்தரத்தில் ஓடுகின்றனர். அதிலும் ஜிம்மிற்கு காரில் மனைவி சகிதம் வருவர், ஒரு சின்ன மத்தளம் போல உள்ள பை, அதில் பாட்டில் தண்ணீர், சின்ன டர்க்கி டவல் இருக்கும்.
மைதானத்தில் வாக்கிங் போவது சில நடுத்தர பெருசுக்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். தங்கள் வயதுடைய ஆட்களை பழக்கம் பிடித்து " வாக் & டாக் " செய்வார்கள். அதிலும் பெண்கள் கூடி பேச நல்ல வாய்ப்பு அமையும். ஆக இதற்காவே தினமும் ஆஜராவார்கள்.
வாலிபர்கள் காதில் பாட்டு கேட்டபடி ஹீரோ - ஆன்ட்டி ஹீரோ ஆவத்ற்காக தினமும் ஜாகிங்கை வழக்கபடுத்துவர். எல்லாம் சரி, இதுவரை யாரும் கீழ்த்தட்டு மக்கள் வாக்கிங் - ஜாக்கிங் செல்வதை காணமுடியாது. அவர்களுக்கு இயற்கையாகவே கழுத்தில் இருந்து வயிறு வரை சிக்ஸ் பேக் இருக்கும்.
நானும் ஜாகிங் ஆரம்பித்தேன், தினமும் அதிகாலை பக்கதில் உள்ள ரயில்நிலைய இடத்தில் ஓடுவேன், அப்போது நான் கண்டது, உழைக்கும் மக்கள் அலாரமில்லாமல் எழுந்து தண்டவாளங்கள் பக்கம் வாலியுடன் (கவிஞரில்லை) ஆய்க்கு செல்கின்றனர். ஆனால் நாம் தொப்பையை தடவியபடி ஓடுகிறாம்.
" உடலினை உறுதி செய் "


{எழுந்து தண்டவாளங்கள் பக்கம் வாலியுடன் (கவிஞரில்லை) ஆய்க்கு செல்கின்றனர். }
ReplyDeleteஅது வாலி இல்லைப்பா,வாளி..
மன்னிக்கவும்... ஓபிஸில் இருந்து எழுதுவதால் சரியாக சரி பார்க்க முடியல....
ReplyDeleteநல்ல மார்ஃபிங் .. அழகா உன்னோட போட்டோ முகத்தை மாத்தி வேற யாரோட முகத்தையோ காட்டியிருக்க ...
ReplyDeleteஅவரு எங்க தூரத்து உறவுக்காரரு... பியர் அதிகமா குடிப்பாப்டி
ReplyDelete