
நான் பள்ளி படிப்பை சிங்கம் மெட்ரிக் பள்ளியில் முடித்தேன். எனக்கும் அசிரியர்களுக்கும் உள்ள உறவை இங்கு உறிக்குறேன்.
முதலில் உள்ளூர் ஃபேமஸ் ஹலோமீனா மிஸ்ஸின் அறிமுகம், ஊரில் உள்ள சில முக்கிய பள்ளிகளில் மாறி மாறி பணி புரிந்தவர். இவரை கண்டால் மாணவ உலகம் கதறும். இதுபோல் ஒரு அடியை தன் வாழ்நாளில் யாரும் வாங்கியிருக்க முடியாது. மாட்டை அடிக்கும் பிரம்பை வைத்து அடி நையபுடைக்கும் ஹலோமீனா. விவாகரத்தான கிருஸ்துவ லேடி, மனதிற்குள் மனிதர்களை வெறுக்கும் ஹிஸ்டரி மிஸ்தான் நம்ம ஹலோமீனா. சிறு தவறு செய்தவன் கூட பயத்தில் மூத்திரம் பெய்திடுவான். மாணவிகளுக்கும் செம அடி விழும், தலைமயிறை பிடித்து கரும்பலகை நோக்கி ஒரு தள்ளு தள்ளும்.என்னை இவரிடம் டிவீசன் சேர்த்துவிட்டார்கள்... தினமும் உயிரை கையில் பிடித்து செல்வேன்.
அடுத்தது சுஜையா மிஸ், ஆங்கில ஆண்டி, சிங்க பள்ளிக்கு அடிக்கல் நாட்டியதிலுருந்து இன்று வரை அதே பள்ளியில் ஆங்கிலத்தை ஆத்திகொண்டிருக்கிறார்.ஆங்கிலத்தில் பேசாவிட்டால் 1 ரூபாய் அபதாரம், நானும் சில நண்பர்களும் வாயை மூடிக்கொண்டு பேந்த பேந்த உட்காந்திருப்போம்..ம்ம்ம் ஒரு வார்தைகூட பேச மாட்டோம்.
நேக்ஸ்டு குரவணராஜன் பயாலஜி சாரு.... நிஜமாவே எங்களுக்கு "பயா"லஜிதான் அவரு.
என்றாசா படிக்கலியா??னு சொல்லி சொல்லி ஜவுளிதுணி கம்பேடுத்து தேவர்மகன் கமல் போல அடித்து ஆடுவார்.அவரு அடிச்சா டவுசரில் இருக்கும் தூசு பறக்கும், ஒருமுறை தாஜாகுமாரின் பின்பக்கத்தில் அடித்ததில் தூசு பறந்து அருகிலிருந்த மாணவிகள் கண்களில் விழுந்தது. இவருட்ட அடி வாங்குனா டவுசர 4 மாசத்துக்கு துவைக்க வேணாம்.(சமயத்தில் டவுசர் கிழியவும் வாய்ப்புண்டு).
ஆடுத்தது செளந்தர்ராஜன் - கணிதப்புலி - செண்டிமண்ட் எலி... கணிதத்துல 4 மார்க் வாங்குன நாங்க மார்க் வாக் மாதிரி தெம்பா இருப்போம் இவரு சேரன் மாதிரி குலுங்கி குலுங்கி அழுவாரு... ஸ்கூல் மேட்ச் பாத்துட்டு தாமதமா வகுப்புக்கு வந்தா அழுதுகிட்டே 'நிங்க உருப்படவே மாட்டீங்கனு'சாபமிடுவார்.
அடுத்தாப்ல கணிதச்சிங்கம் முகநாதன், டேய் புடையங்கண்ணா இதான் இவரோட ஃபேமஸ் டயலாக், ஆனா இவரோட பல்லி ஒருமாதிரியா வெடிச்சு சேதறியிருக்கும். நான் அவரோட வகுப்பு இல்லைனாலும் தேடி வந்து மார்க் கேட்டு அடிச்சுட்டு போவாப்ல, ரொம்ப நல்ல டைப்பு. இவரிடம் டிவீசன் போன அடிவிழுகாது, போகலைனா தூக்கி போட்டு அடிப்பாப்டி.
ஒருதடவ சொத்து நாராயணன் என்ற டிவீசன் பொகாத மாணவன கூப்பிட்டு உடம்பு எப்டி இருக்குனு கேட்டாரு, அவனும் சாருக்குதான் நம்ம மேல எவ்வளோ பாசம்னு நம்பி உடம்பு நல்லாயிருக்கு சார்னு சொல்லிட்டான்,... சவுக்கியாமானு கேட்ட வடிவேலுவ கவுண்டமணி தூக்கி போட்டு மிதிப்பாரே அது போல செம அடி, கொஞ்ச நாளைக்கு அவன் சவுக்கியாமாக இல்லை.இருந்து அவரிடம் டிவீசன் போகாத மாவீரனவன்.
அடுத்து பிசிக்ஸ் சார் சங்கடேஸன், சற்றே வழுக்கை, வாலிபால் வீரர் நெடு நெடு உசரம்.
மிகுந்த நகைச்சுவை உணர்வுள்ளவர். இவரு டிவீசன் வராத மாணவர்களிடம் வாலிபால் மேட்ச் ஆடுவார்.குனிய விட்டு முதுகில் அடித்தால் அடுத்த 5 நிமிடத்துக்கு சரியா மூச்சு விடமுடியாது. ஸ்கூல் லேபில் வச்சே தம்மடிப்பார். ஆனா இவரிடம் டிவீசன் சேர்ந்துவிட்டால் ரொம்ப நல்லவராயிடுவாரு.
அடுத்து வருவது கெமிஸ்திரி சாரு திருவாளர். ஜாரிமுத்து, நல்ல டைப்பு ஆசாமி. ரொம்ப குள்ளமானவரு. இவரு இனிஸியல் C, அனவரும் இவரை CMனு கூப்பிடுவாங்க. நாங்க செண்டிமீட்டர்னு கலாய்ப்போம். லேபில் இருக்கும் போது இவர பாத்தா டேஸ்ட் டியூபில் துணி சுத்தியது போல நடந்து வருவாரு.
லாஸ்ட் ப்ட்நாட் லீஸ்ட் திரு.சதிரேசன், ஹிஸ்டரி சாரு. மாபெரும் காமடியன். 47க்கு முன்னாடி பிறந்திருந்தா இவரு ஒருத்தரே போதும் வெள்ளைகாரன் கோர்ட்ட காணும் டைய காணும்னு ஓடிருப்பானுங்க, சும்மா முரட்டுத்தனமா இங்கிலிஸுல பேசுவாரு சாரி கர்ஜிப்பாரு.
சில உதாரணங்கள்,
close the book put the bag
Go and punish the principal
your life going down like Kuttraalam falls
Madam this boy affect the stomach.
Heyyy srikannan jumping like monkey from 1 desk to 1
Once we asked a doubt to him about Inverted Lotus, அவரு சொன்னாரு அது வந்துப்பா கவர்ந்திழுக்குற லோட்டஸ்னு.
நல்லா நாக்க மடிச்சுகிட்டு கண்ண துறுத்திக்கிட்டு கடிமையா கொட்டுவாரு. சைக்கிள எடுத்துகிட்டு வீடு வீடா போய் டிவீசனுக்கு ஆள் புடிச்சாரு. அவருக்கு அழகான மனைவி, இருந்து மச்சினிய லைட்டா கொஞ்சுவாரு. எங்க மூனு பேர் பேரும் குமார்னு முடியும் எங்களை ரோட்டுல எங்க பாத்தாலும் ஹய்ய்ய்ய் திரி குமார்ஸ் வேர் கோயிங்னு பிளிறுவாரு.
இதுபோக விளையாட்டு சாரு திரு கூஜாராம்னு ஒருத்தரு சுத்திகிட்டு இருந்தாரு. மனசுக்குள் மன்மதன்னு நினைப்பு. சில கசமுசா அவரையும் சில மாணவிகளைப் பத்தியும் உலா வந்தது.
பிங்குறிப்பு:- அனைத்து பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன, இன்னும் பல நகைச்சுவை சம்பவங்கள் உள்ளது, அது இனி தொடரும்.. வரும் பதிவுகளில்.