போடா பச்சிலை புடிங்கி

போடா பச்சிலை புடிங்கி

Tuesday, December 15, 2009

நண்பனுக்கு நான் எழுதிய பிறந்தநாள் வாழ்த்து மடல்

இனிய நண்பனுக்கு,
திரைகடேலாடி திரவியம் தேட சென்றாய்,
சிறப்பாகேவ தேடுகிறாய் , அதற்கு கொடுக்கும் விலை
பெற்றோர் உடன் பிறந்தோர் நண்பர் கூட்டத்தின் முகம்
இவைதான் ….. தொழில்நுட்ப வளர்ச்சியால் செல்பேசுகிறோம்
வீடியோ சாட் மூலம் மந்தமாய் சொந்தபந்தங்கைள
பார்க்கிறோம்.
கடைசியாய் வீட்டில் பால்பாயாசம் கிண்டி ,
புத்தாடையுடுத்தி கிழவி காலில் ஆசிர்வாதம் வாங்கி
கொண்டாடிய பிறந்தநாள் எப்போ என ஞாயாபகமிருக்கா??
கடைசியாய் ஊர் நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி ,
மாலையில் உற்சாகபான விருந்து தந்து
கொண்டாடிய பிறந்தநாள் எப்போ என
ஞாயாபகமிருக்கா??.......................
இவையைனத்தும் நாம் வாழ்வில் வெற்றிபெற இழக்கும்
உன்னதங்கள்... ஊர்திரும்பும் நாளில் நாம் அடையும் சந்தோசம் ,
பூரிப்பு வாழ்நாளில் இதுவைர அடைந்திராதது. . மதுரைய
தாண்டியதும் " எங்க ஊர் வந்திடுச்சுடா " என மனம் நினைக்கும்.
கல்லுபட்டி வந்ததும் ஊரில் முன்னேம வந்திறங்கியிருக்கும்
நண்பனுக்கு போன் செய்து டேய் நா கல்லுபட்டிய தாண்டியாச்சு
என தகவல் அளிப்பதும், கிருஷ்ணன் கோவில் தாண்டியதும்
உடம்பில் ஓர் இனம் புரியாத சிலிர்ப்பு சில்லிடும்.
பஸ்நிலையத்திலிருந்து வீடு போவதற்குள் எட்டு பேரிடம் "
ஆமங்க... இப்பதான் வந்தேன். ஆமா அங்க ரொம்ப வெயில்
ஜாஸ்த்தி " போன்ற பதிலளிக்க நேரிடும், இது ஒரு சுகஇம்சை.
வீடு வந்து பெற்றோரை கண்டதும் கண்டிப்பாக கண்ணில் நீர்
சுரக்கும், ஆனால் நண்பர்களை கண்டதும் ஒரு இனம் புரியாத
குதூகலமும் , சிரிப்புமாய் இருக்கும்.
நாம் எவ்வளவுதான் குண்டாக இருந்தாலும் அம்மா கேட்பது
' என்னடா கொஞ்சம் மெலிஞ்சமாதிரி இருக்க?? " உடேன அப்பா.”
ஏன்டா அங்க என்.வி கிடைக்காதா??" என்பார்.
" பிரிந்து கிடந்த வலிக்கு இதேல்லாம்தான் சுகவைத்தியம் "
தொலைவிலிருக்கும் நண்பனுக்கு எனது இனிய மனமார்ந்த
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இன்று போல் என்றும் வாழ்க - கூடிய விரைவில் இந்தியாவில்
வந்து வாழ்க !!

விஜய்க்கு இது 49வது படம், பிரபுதேவாவிற்கு கடைசி படம்.

வில்லு :-

விஜய்க்கு இது 49வது படம், பிரபுதேவாவிற்கு கடைசி படம்.


போக்கிரி படத்திற்கும் வில்லுவிற்கும் ஒரே வித்தியாசம் , அந்த படம் பெயர் போக்கிரி, இது வில்லு.எடுத்ததும் சண்டை (போடா...) உடனே பாட்டு.... முதல் பாதி (போடா...) வடிவேலு தயவில் ஓடுது...நயன்தாரா படம் முழுக்க தனது " திறமையை " காட்டி மகிழ்விக்கிறார். அவர் 8 பேக் வைத்துள்ளார் (வவுத்துல 6). காணாமல் போன ஆனந்தராசு, srimaan , வையாபுரி இதுல வந்து போறாங்க.

ஒரு பாட்டில் " பீமங்கிட்ட கதய கேட்டேன்" என வரும்.... இவரு பிரபுதேவாட்ட ஒழுங்கா கதைய கேட்டிருக்கலாம்.!!

இது வரை ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த அனைத்து நபர்களும் விஜய்யிடம் "மூத்திரத்த வாங்கி குடிக்கலாம்". விஜய் விமானத்தில் ஃபுட்போடு அடிக்கிறாப்ல.. (அதுக்கு நம்மல செருப்பால நாலு அடி அடிச்சிருக்கலாம்).இடைவேளைக்கு முன், பின்சீட்டில் ஒரு அப்பாவி கேட்டார் " படம் எப்ப போடுவாங்க" ?

இரண்டாம் பாதி மிக கொடுமை....

டைடில் போடும் போது ஒரு உச்சகட்ட கொடுமை... விஜய் ரசிகர் மன்ற
கொடியை காண்பித்து மக்களுக்கு பீதியை கிளப்பினார் சந்திரசேகர் எனப்படும் மனநோயாளி.
எல்லாமே குத்துப்பாட்டு... " இந்தா வாங்கிக்கங்கடா " என விஜய் பொளந்து கட்டுறாப்ல.!!

அவனவன் உசிர கொடுத்து படம் எடுக்குறாய்ங்க.... விஜய் படம் எடுத்து உசிர எடுக்குறாப்டி !!


ஒரே வரில சொன்னா " விஜய் திருந்தவே மாட்டாப்ல " --- நாம தான் அவரு படம் ஓடுற தெருபக்கம்கூட போவகூடாது. மிக சாக்குறதையா இருக்கோனும் !!!!!!!


பி.கு:- படம் முடிஞ்சு வந்ததும் கடுப்புல எழுதினது.

நடிகர்கள்

எனக்கு தெரிந்தவரையில் இணையதளத்தில் அஜித்குமாருக்குத்தான் நிறைய விசிறிகள்.
ஆனால் உன்மை நிலவரம் என்னானு தெரில.... ஒரு விஜய் படம் வெளிவந்தா அது குறைந்தபட்ச்சம் அவரது ரசிகர்களையாவது திருப்திபடுத்தும். விஜய் படம் ஓடும் அரங்கில் சென்று பார்த்தால் தெரியும், குறைந்தது 1 வாரத்திற்காவது திருவிழா கோலத்துடனிருக்கும்.
சில அஜித்குமாரு படத்தை அவரது ரசிகர்கள் கூட இரண்டாவது முறை போக தயங்குவதை பார்த்திருக்கிறேன், உதாரணம்:- ஆஞ்சனேயா, ரெட், ராஜா, ஏகன், திருப்பதி, ஆழ்வார் (இந்த படப் பெயர் மறந்து போய் கூகுலில் தேடினேன்), பரமசிவன். அஜித்குமாருக்கு அமூல் பேபி முகம், குரலும் மிக மென்மையா இருக்கும். இதவச்சுகிட்டு அவரு தூங்கி எழுந்த கண்களுடன் வந்து நின்னு "ஹேய் நா தனி ஆள் இல்ல"னு சொல்லும் போது எங்களுக்கு ரொம்ப பாவமா இருக்கும், ஏன் இந்தாளு இம்பூட்டு கஸ்டபடிறாப்லனு உச்சு கொட்டுவோம். அஜித்குமாரு நடித்த சண்டை காட்சிகளை கூர்ந்து பாருங்கள், ரொம்ப கஷ்டப்பட்டு எதிரிய அடிப்பாரு, கண்ண ஒருமாதிரியா மூடிகிட்டு, முகமும் லைட்டா அழுகுற மாதிரி இருக்கும். அவரு மாதவன் மாதிரி சாப்ட் ஹிரோ ரோல் பண்ணலாம். ஒரு 100 அஜித்குமாரு ரசிகர்களை சேரில் கட்டி போட்டு அவர் நடித்த ராஜா படத்தை போட்டு காட்டினால் அவர்கள் கதறி அழுவதை நீங்கள் தடுத்து நிறுத்தமுடியாது. "காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்" அந்த பாட்டின் ஊடால வெள்ளை-மஞ்சள் உடையில் அஜித்குமாரு ஜோவிடம் ஒரு ரியாக்சன் காட்டுவாரு பாருங்க...ம்ம்ம் முடியாது !!

ஒருத்தன் படம் பார்க்க வந்தா அவனுக்கு தேவை ஒரு 3 மணி நேர பொழுதுபோக்கு, 5 பாட்டு 4 ஃபைட்டு கொஞ்சம் காமடி இருந்த தேவல... இத ஒழுங்கா பண்ணது எம் ஜி ஆர், ரஜினி, விஜய். சிவாஜி நடிப்பை உலகமே ரசிக்குது ஆனா அவரு படத்துல போட்ட சண்டைய
பாக்க கொஞ்சம் கஷ்டமா இருக்கும், ரொம்ப சிரமப்பட்டு கால தூக்கி எதிரிய எத்துவாப்ல, ஆனா அதே எதிரிய அவர் புருவத்த தூக்கி மிரட்டும் போது ரொம்பவே ரசிக்கலாம். ஆனா மக்கள் திலகம் ரொம்ப ஃபிட்டா இருந்து, அதிரடியா சண்டை போடுறத ரசிக்கலாம். கமலும் பல ஆக்சன் படங்கள் பண்ணியிருந்தாலும் ரஜினியின் பத்தவச்ச சிகரட் முன்னால கமலின் பீடி அணைந்துவிட்டது.நடிப்பில் கமலை நெருங்கமுடியாது என்பதும் உன்மைதான்.

விஜய் படம்னா எல்லா பாட்டும் ஹிட்டு, ரெண்டு தெருக்கு அங்கிட்டு விஜய் பாட்டு ஓடினாலும் அது எந்த படப்பாடல்னு சொல்லிடலாம். அதேபோல சண்டை காட்சியில் விஜய் காட்டும் ஆக்ரோசம் கடிமையா இருக்கும். நல்ல தெளிவான குரல். உதாரணம்:- தமிழன் கிளைமாக்ஸ் - சிட்டிசன் கிளைமாக்ஸ் (கோர்ட் சீன்).

சூர்யா பார்க்க அழகு, ஆரம்பகால படத்துல நடிப்ப கை கக்கத்துல வச்சு புளிஞ்சிருப்பாப்டி.
விக்ரமன் தோண்டிய குழியில், முதல் பாடல்ல ரொம்ப குனிஞ்சு கேமராவ பாத்து கடமைக்கு சிரிச்சுகிட்டு பாவம் போல ஆடுவாப்ல. பாலா உதவில எழுந்துட்டாரு. அடுத்த கமல் நாந்தான் என்கிற அரிப்பு அதிகம் இவருக்கு. சமீபத்திய ஆதவன் மிக கொடுமைனு பலர் சொல்ல கேட்டேன்.

விக்ரம் இப்போ அதள பாதளத்தை நோக்கி பயணிச்சுகிட்டு இருக்கார். லிங்குசாமி பீமானு டைட்டில சொன்னதும் விக்ரம் ரொம்பவே மகிழ்ச்சியா ஒத்துகொண்டாராம், இத அவரே ஒரு டீ.வி.ல சொன்னாரு.

சிம்பு - தனுஷ், இவங்க ரெண்டு பேர்ல தனுஷ் மட்டும் தேறுவாரு, சிம்புக்கு வாய் அவங்க அப்பாவ விட 2 இன்ச் கூட, அதனாலயே திறமையிருந்தும் நம்மக்கள் ஏத்துக்க மாட்றாங்க.

இதுனால என்ன விஜய் ரசிகன்னு நினைக்க வேணாம், நமக்கு எப்போதும் தலைவன் ரஜினிதான் !!

பி.கு:- வில்லு படம் வெளியானதும் நான் என் நண்பர்களுக்காக சின்னதா ஒரு விமர்சனம் எழுது அனுப்பினேன். அடுத்த பதிவில் அது காணகிடைக்கும்.

Monday, December 7, 2009

மைதானத்தில் ஒரு மானபங்கம் !!

இடம் :- டி. ஒய். பேடல் மைதானம்.
நாள் :- (எங்களுக்கு கெட்ட நாள்) 13.03.2009
நேரம் :- ( எங்களுக்கு கெட்ட நேரம்) மதியம் 3:00.
சம்பவம் :- T10 - கார்பேரட் டோர்னமண்ட்.
Oranger Business Services VS D.Y. Patel group.
D.Y. Patel group கோச் :- அபய் குருவில்லா
Oranger Business Services கோச் :- கோச்சுகிட்டு போய்ட்டாப்ல.

அது ஒரு 10 ஓவர் ஆட்டம். நான் முதலயே சொன்னேன் டாஸ் ஜெயிச்சா நல்லதுனு, .... விதி ... டாஸும் ஜெயிச்சானுவ. அந்த அணியினர் மும்பை அணிக்கு ஆடுபவர்களாம். ஓப்பனர்கள் இருவரும் காட்டடியை மேற்கொண்டனர். பவுளர் வீசி, பிட்சில் குத்திய பந்து மறுநொடி மைதானத்திற்கு வெளியேதான் குத்தியது. சிக்ஸர் மழை அன்று 10 ஓவருக்கும் பெய்தது. ஈவு இரக்கமற்று நடந்து கொண்டனர். " ஹய்யா நாங்களும் விளையாட போறோமே" என்று ஜாலியாக கிளம்பி வந்தது எவ்வளவு பெரிய தப்பு எனப் புரிந்தது. எங்கள் அணி பவுளர்களுக்கு கண்ணில் பூச்சி பறந்தது. அப்படி ஒரு அசுர விளையாட்டை இதுவைர நேரில் பார்த்ததில்லை.அவர்கள் ஆளுக்கு 2 பேட் வைத்திருந்தனர், எங்களிடம் மொத்தம் 2 பேட், அதில் ஒன்றில் 1/2 கிலோ பேண்டேஞ் சுற்றியிருக்கும். ஹைய்லட்ஸ்க்கே ஹைலட்ஸ் போட்டது போல பொளந்து கட்டினர். எங்கள் அணியினேரா கேட்ச் மட்டும் கண்டிப்பாக பிடிக்க மாட்டேன் என ஆத்தா கோவிலில் சத்தியம் செய்து விட்டு வந்துள்ளனர். இதை பயன்படுத்தி அவர்கள் எகிறி எகிறி அடித்தனர். ஒரு கெடா மாடு 96 ரன்கள் குவித்தான். 10 ஓவரில் 210 ரன்கள் எடுத்தனர் ராட்ஸர்கள்.

" ஒரு உலக கோப்பையில் இந்திய அணி, பெர்முடா என்ற அணியின் பெர்முடாஸை நைஸாசாக உருவியது போல, இவர்கள் எங்கள் டவுசைர வலுக்கட்டாயமாக கிழித்து, உருவி மானபங்க படுத்தினார்கள்."

அடுத்து எங்க முறை, எதிரணியில் முடி வெட்ட கூட காசில்லாத ஒருவன்தான் முதல் ஓவர் வீசுவான் என அறிந்த எங்கள் கேப்டன் என்னை ஓப்பனராக அனுப்பினான். நானும் ஒருவித கடுப்புடன் சென்றேன்,உள்ளே சென்றதும் எதிறாளி ஒருவன் " ஹேல்மட் எங்கே? என்றான், நான் " அதெல்லாம் பழக்கமில்லிங்கோ' என்றேன். அவன் " பிட்சில் புல் ஜாஸ்த்தி , ஹேல்மட் போடாட்டி நீ அனாவசியமாக பூமிக்கு இரத்தம் கொடுக்க நேரிடும்" எனறான். எனக்கோ இதை கேட்டதும் அடிவயிற்றில் சிறு மாற்றம் ஏற்பட்டது. 1 பவுண்டரி மட்டும் அடித்து நான் அவுட் ஆனேன். 10 ஓவர் முடிவில் 103 ரன்கள் எடுத்து மானம் காத்தோம்.

எதிர் அணியினருக்கு ஒரு சில வார்த்தைகள் சொல்ல நினைத்தேன்..
" நீ ஒரு வீரன அடிச்சிருந்தேனா நானே தலமை தாங்கி உனக்கு இந்த கோப்பைய கொடுத்திருப்பேன். நீ அடிச்சது ஒரு பிள்ள பூச்சிய." என மனதுகுள்ளேயே மண்ணை வாரி தூற்றிவிட்டு வந்தேன்.


இந்த கிரிக்கெட் திருவிழாவை தொடங்கிவைக்க திரு. சாரு சர்மா வந்தார். அனவருக்கும் கை கொடுத்து வாழ்த்துகள் கூறினார்.

கடந்த மார்ச் மாதம் நடந்த அசம்பாவிதமிது. அது ஒரு கார்பொரேட் டோர்னமண்ட்
பறந்த சிக்ஸரை பார்த்து முதலில் மிகவும் கடுப்பாக இருந்தது... .. ஆடிய சியர் மங்கைகளை பார்த்து மனதை தேற்றிகொண்டோம் !!

பதிவுலகிற்கு என் வணக்கம்

வணக்கம் அன்பர்களே,

நான் பல மாதங்களாக சில பதிவர்களை படித்து வருகிறேன். எனக்கு வாசிப்பில் கொஞ்சம் ஆர்வமுண்டு. நண்பர் ஒருவர் " நீங்க கூட ஃபிளாக் ஆரம்பிக்கலாம் என"
சும்மா இருந்த என்னை சொறிஞ்சு விட்டுட்டாப்ல. சரி நாமளும் ஒரு சின்ன கடைய
ஆரம்பிச்சுடலாம்னு முடிவு பண்ணி களத்துல இறங்கிட்டேன். எனக்கு அனைவரது அணைப்பும் ஆதரவும் கிட்டும் என நம்பிக்கையில் publish post பொத்தானை கிளிக்குகிறேன்.

மிக்க நன்றி !!