போடா பச்சிலை புடிங்கி

போடா பச்சிலை புடிங்கி

Thursday, March 11, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா - ராஸ்கல் தியேட்டருக்கு வருவாயா !!??




காதலர்களுக்கு ஏற்ற படம்.... புது பரிமாணத்தில் விரல் வித்தைக்காரன் சிம்பு. சில இடங்களில் மட்டும் அழகாக திரிஷா. சிம்பு பி.இ. முடித்துவிட்டு படத்தின் டைரக்டரை போல சினிமா மோகத்தில் மிதக்கிறார். திரிஷாவை பார்த்ததும் காதல் பீறிடுகிறது... சொல்லப்பட்ட வசனம் " காதல்னா தூக்கி அடிக்கனும் குப்புற கவுத்தனும் தலையில கொட்டனும் "
திரிஷா சேலையில் நடந்து வருவது சின்ன புள்ளைங்க ஆய் வரும் போது ஒருமாதிரியா நடக்குங்க அது போல இருக்கு. வலது கால் அவருக்கு சைடு வாங்குது (என்ன பிரச்சனையோ). திரிஷா கேரக்டர் இந்த காலத்து இளம் பெண்களை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. காதலும் செய்கிறார், அப்பா திட்டுவார் ஃபிரண்ட்ஸா இருப்போம்னு சொல்லி காதலனை மண்டை காயவைகிறார். மனதையும் மற்றதையும் வருடும் பாடல்கள் தி கிரேட் ரஹ்மான். நாயகன் நண்பராக படத்தின் தயாரிப்பாளர் சிறப்பாக காமெடி பண்ணியிருக்கார். கேரளா கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்டப்பட்டுள்ளது (கேரளானாலே குளிர்ச்சிதானே). சர்ச்சில் த்ரிஷா கல்யாணத்தை நிறுத்திய அன்றிரவே சிம்பு அவள் வீட்டிற்கு போய் கைய புடிக்குறாரு, வா ஓடி போகலாம்னு கெஞ்சுறாரு, இவ்வளோ பிரச்சனை நடந்திருக்கு வீட்டில் ஆனால் அவர்கள் சாவகாசமாய் கொஞ்சுறாங்க... த்ரிஷா அப்பா அம்மா எல்லோரும் அன்றிரவு இரண்டாம் ஆட்டத்துக்கு போயிட்டாங்க போல !!

கிளைமேக்ஸ் கொஞ்சம் புதுசுதான் , எதிர்பாராத திருப்புமுனைகளும் பள்ளத்தாக்குகளும் உள்ளது.

மொத்தத்தில் விண்ணைத்தாண்டி வருவாயா - ராஸ்கல் தியேட்டருக்கு வருவாயா !!??

No comments:

Post a Comment