போடா பச்சிலை புடிங்கி

போடா பச்சிலை புடிங்கி

Tuesday, December 15, 2009

நண்பனுக்கு நான் எழுதிய பிறந்தநாள் வாழ்த்து மடல்

இனிய நண்பனுக்கு,
திரைகடேலாடி திரவியம் தேட சென்றாய்,
சிறப்பாகேவ தேடுகிறாய் , அதற்கு கொடுக்கும் விலை
பெற்றோர் உடன் பிறந்தோர் நண்பர் கூட்டத்தின் முகம்
இவைதான் ….. தொழில்நுட்ப வளர்ச்சியால் செல்பேசுகிறோம்
வீடியோ சாட் மூலம் மந்தமாய் சொந்தபந்தங்கைள
பார்க்கிறோம்.
கடைசியாய் வீட்டில் பால்பாயாசம் கிண்டி ,
புத்தாடையுடுத்தி கிழவி காலில் ஆசிர்வாதம் வாங்கி
கொண்டாடிய பிறந்தநாள் எப்போ என ஞாயாபகமிருக்கா??
கடைசியாய் ஊர் நண்பர்களுக்கு இனிப்பு வழங்கி ,
மாலையில் உற்சாகபான விருந்து தந்து
கொண்டாடிய பிறந்தநாள் எப்போ என
ஞாயாபகமிருக்கா??.......................
இவையைனத்தும் நாம் வாழ்வில் வெற்றிபெற இழக்கும்
உன்னதங்கள்... ஊர்திரும்பும் நாளில் நாம் அடையும் சந்தோசம் ,
பூரிப்பு வாழ்நாளில் இதுவைர அடைந்திராதது. . மதுரைய
தாண்டியதும் " எங்க ஊர் வந்திடுச்சுடா " என மனம் நினைக்கும்.
கல்லுபட்டி வந்ததும் ஊரில் முன்னேம வந்திறங்கியிருக்கும்
நண்பனுக்கு போன் செய்து டேய் நா கல்லுபட்டிய தாண்டியாச்சு
என தகவல் அளிப்பதும், கிருஷ்ணன் கோவில் தாண்டியதும்
உடம்பில் ஓர் இனம் புரியாத சிலிர்ப்பு சில்லிடும்.
பஸ்நிலையத்திலிருந்து வீடு போவதற்குள் எட்டு பேரிடம் "
ஆமங்க... இப்பதான் வந்தேன். ஆமா அங்க ரொம்ப வெயில்
ஜாஸ்த்தி " போன்ற பதிலளிக்க நேரிடும், இது ஒரு சுகஇம்சை.
வீடு வந்து பெற்றோரை கண்டதும் கண்டிப்பாக கண்ணில் நீர்
சுரக்கும், ஆனால் நண்பர்களை கண்டதும் ஒரு இனம் புரியாத
குதூகலமும் , சிரிப்புமாய் இருக்கும்.
நாம் எவ்வளவுதான் குண்டாக இருந்தாலும் அம்மா கேட்பது
' என்னடா கொஞ்சம் மெலிஞ்சமாதிரி இருக்க?? " உடேன அப்பா.”
ஏன்டா அங்க என்.வி கிடைக்காதா??" என்பார்.
" பிரிந்து கிடந்த வலிக்கு இதேல்லாம்தான் சுகவைத்தியம் "
தொலைவிலிருக்கும் நண்பனுக்கு எனது இனிய மனமார்ந்த
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இன்று போல் என்றும் வாழ்க - கூடிய விரைவில் இந்தியாவில்
வந்து வாழ்க !!

4 comments:

  1. indraya yugathai prathibalikirathu

    ReplyDelete
  2. ரொம்ப சரியா சொன்னீங்க

    ReplyDelete
  3. தல நீங்க விசய் காத்தாடியா??? உங்களை எல்லாம் நெனச்சா சிப்பு சிப்பா வருது....

    ReplyDelete
  4. தொண்டா நான் விசய் காத்தாடியில்லை, நீ பாவம் கஷ்ட்டப்பட்டு சிப்ப வேணாம்.. உனக்கு நினக்குறதுக்கு வேற விசயமில்ல போல...

    ReplyDelete