இடம் :- டி. ஒய். பேடல் மைதானம்.
நாள் :- (எங்களுக்கு கெட்ட நாள்) 13.03.2009
நேரம் :- ( எங்களுக்கு கெட்ட நேரம்) மதியம் 3:00.
சம்பவம் :- T10 - கார்பேரட் டோர்னமண்ட்.
Oranger Business Services VS D.Y. Patel group.
D.Y. Patel group கோச் :- அபய் குருவில்லா
Oranger Business Services கோச் :- கோச்சுகிட்டு போய்ட்டாப்ல.
அது ஒரு 10 ஓவர் ஆட்டம். நான் முதலயே சொன்னேன் டாஸ் ஜெயிச்சா நல்லதுனு, .... விதி ... டாஸும் ஜெயிச்சானுவ. அந்த அணியினர் மும்பை அணிக்கு ஆடுபவர்களாம். ஓப்பனர்கள் இருவரும் காட்டடியை மேற்கொண்டனர். பவுளர் வீசி, பிட்சில் குத்திய பந்து மறுநொடி மைதானத்திற்கு வெளியேதான் குத்தியது. சிக்ஸர் மழை அன்று 10 ஓவருக்கும் பெய்தது. ஈவு இரக்கமற்று நடந்து கொண்டனர். " ஹய்யா நாங்களும் விளையாட போறோமே" என்று ஜாலியாக கிளம்பி வந்தது எவ்வளவு பெரிய தப்பு எனப் புரிந்தது. எங்கள் அணி பவுளர்களுக்கு கண்ணில் பூச்சி பறந்தது. அப்படி ஒரு அசுர விளையாட்டை இதுவைர நேரில் பார்த்ததில்லை.அவர்கள் ஆளுக்கு 2 பேட் வைத்திருந்தனர், எங்களிடம் மொத்தம் 2 பேட், அதில் ஒன்றில் 1/2 கிலோ பேண்டேஞ் சுற்றியிருக்கும். ஹைய்லட்ஸ்க்கே ஹைலட்ஸ் போட்டது போல பொளந்து கட்டினர். எங்கள் அணியினேரா கேட்ச் மட்டும் கண்டிப்பாக பிடிக்க மாட்டேன் என ஆத்தா கோவிலில் சத்தியம் செய்து விட்டு வந்துள்ளனர். இதை பயன்படுத்தி அவர்கள் எகிறி எகிறி அடித்தனர். ஒரு கெடா மாடு 96 ரன்கள் குவித்தான். 10 ஓவரில் 210 ரன்கள் எடுத்தனர் ராட்ஸர்கள்.
" ஒரு உலக கோப்பையில் இந்திய அணி, பெர்முடா என்ற அணியின் பெர்முடாஸை நைஸாசாக உருவியது போல, இவர்கள் எங்கள் டவுசைர வலுக்கட்டாயமாக கிழித்து, உருவி மானபங்க படுத்தினார்கள்."
அடுத்து எங்க முறை, எதிரணியில் முடி வெட்ட கூட காசில்லாத ஒருவன்தான் முதல் ஓவர் வீசுவான் என அறிந்த எங்கள் கேப்டன் என்னை ஓப்பனராக அனுப்பினான். நானும் ஒருவித கடுப்புடன் சென்றேன்,உள்ளே சென்றதும் எதிறாளி ஒருவன் " ஹேல்மட் எங்கே? என்றான், நான் " அதெல்லாம் பழக்கமில்லிங்கோ' என்றேன். அவன் " பிட்சில் புல் ஜாஸ்த்தி , ஹேல்மட் போடாட்டி நீ அனாவசியமாக பூமிக்கு இரத்தம் கொடுக்க நேரிடும்" எனறான். எனக்கோ இதை கேட்டதும் அடிவயிற்றில் சிறு மாற்றம் ஏற்பட்டது. 1 பவுண்டரி மட்டும் அடித்து நான் அவுட் ஆனேன். 10 ஓவர் முடிவில் 103 ரன்கள் எடுத்து மானம் காத்தோம்.
எதிர் அணியினருக்கு ஒரு சில வார்த்தைகள் சொல்ல நினைத்தேன்..
" நீ ஒரு வீரன அடிச்சிருந்தேனா நானே தலமை தாங்கி உனக்கு இந்த கோப்பைய கொடுத்திருப்பேன். நீ அடிச்சது ஒரு பிள்ள பூச்சிய." என மனதுகுள்ளேயே மண்ணை வாரி தூற்றிவிட்டு வந்தேன்.
இந்த கிரிக்கெட் திருவிழாவை தொடங்கிவைக்க திரு. சாரு சர்மா வந்தார். அனவருக்கும் கை கொடுத்து வாழ்த்துகள் கூறினார்.
கடந்த மார்ச் மாதம் நடந்த அசம்பாவிதமிது. அது ஒரு கார்பொரேட் டோர்னமண்ட்
பறந்த சிக்ஸரை பார்த்து முதலில் மிகவும் கடுப்பாக இருந்தது... .. ஆடிய சியர் மங்கைகளை பார்த்து மனதை தேற்றிகொண்டோம் !!
போடா பச்சிலை புடிங்கி
Monday, December 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)


தமிழ் வாழ வாழும் நீ,
ReplyDeleteஇம்மண்ணில் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
மிக்க நன்றி !!
ReplyDelete